ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்ஐ) அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை
- அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்ஐ) அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
- அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது.
- மாசு கொண்ட நாடுகளில் வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் கரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே இருந்தது.
- இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் எனத் தெரிய வந்துள்ளது.
- உலக அளவில் நிலவும் காற்று மாசுவை பார்த்தால், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் குறையும். காற்று மாசுவின் அதிக பாதிப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளில்தான் காணப்படுகிறது.
- 1998-ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் சராசரி காற்று மாசு ஆண்டுக்கு 61.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் சர்வதேச ஒப்பீடுகளை கணக்கில் கொள்ளும் போதும் இந்தியாவின் அதிக மக்கள் தொகையும் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
- உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் டெல்லி, பிஹார், உத்தரபிரதேச மாநிலங்களில்தான் மிக மோசமான காற்று மாசு பிரச்னை உள்ளது.
- தற்போதைய நிலை தொடர்ந்தால் டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உத்தர பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பிஹார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும்.
- காற்று மாசு காரணமாக சராசரியாக இந்தியர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023-ம் ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களின் 3-வது பகுதி நடைபெற்று வருகிறது. இதில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பிடிக்கும் 5 சிறந்த அணிகளும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
- தகுதி சுற்று தொடரில் 'டி' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா தனது முதல் இரு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், கம்போடியாவை தோற்கடித்து 6 புள்ளிகள் பெற்றிருந்தது. இதே பிரிவில் ஹாங்காங் 6 புள்ளிகள் பெற்ற போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் முதலிடம் வகித்திருந்தது.
- இதற்கிடையே 'பி' பிரிவில் இடம் பெற்றிருந்த பாலஸ்தீனம் தனது கடைசி ஆட்டத்தில் நேற்று பிலிப்பைன்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
- இதன் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து ஆசிய கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது பாலஸ்தீனம் அணி. பிலிப்பைன்ஸ் அணி 4 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்த போதிலும் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- பிலிப்பைன்ஸ் வெளியேறியதால் டி பிரிவில் நேற்றைய நிலவரப்படி 2-வது இடம் வகித்த இந்திய அணியும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டிக்கு முன்னதாகவே தகுதி பெற்றுள்ளது.
- ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெறுவது இதுவே முதன்முறை. ஒட்டுமொத்தத்தில் இந்திய அணி 5-வது முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. 1964, 1984, 2011, 2019 ஆகிய ஆணடுகளிலும் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடி இருந்தது
- இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரமவுலி குமார் பிரசாத் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பரில் நிறைவடைந்தது.
- பின்லாந்து நாட்டின் பழைய நகரமான துர்க்குவில் நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். முன்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 87.58 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.