TNPSC SHOUTERS - AUGUST 2018
CURRENT AFFAIRS
| ||
S.NO
|
DAY & MONTH
|
DOWNLOAD LINK
|
1.
|
1st AUGUST 2018
| |
2.
|
2nd AUGUST 2018
| |
3.
|
3rd AUGUST 2018
| |
4.
|
4th AUGUST 2018
| |
5.
|
5th AUGUST 2018
| |
6.
|
6th AUGUST 2018
| |
7.
|
7th AUGUST 2018
| |
8.
|
8th AUGUST 2018
| |
9.
|
9th AUGUST 2018
| |
10.
|
10th AUGUST 2018
| |
11.
|
11th AUGUST 2018
| |
12.
|
12th AUGUST 2018
| |
13.
|
13th AUGUST 2018
| |
14.
|
14th AUGUST 2018
| |
15.
|
15th AUGUST 2018
| |
16.
|
16th AUGUST 2018
| |
17.
|
17th AUGUST 2018
| |
18.
|
18th AUGUST 2018
| |
19.
|
19th AUGUST 2018
| |
20.
|
20th AUGUST 2018
| |
21.
|
21st AUGUST 2018
| |
22.
|
22nd AUGUST 2018
| |
23.
|
23rd AUGUST 2018
| |
24.
|
24th AUGUST 2018
| |
25.
|
25th AUGUST 2018
| |
26.
|
26th AUGUST 2018
| |
27.
|
27th AUGUST 2018
| |
28.
|
28th AUGUST 2018
| |
29.
|
29th AUGUST 2018
| |
30.
|
30th AUGUST 2018
| |
31.
|
31th AUGUST 2018
|
சிறந்த எம்.பி.க்களுக்கு விருது ஜனாதிபதி வழங்கினார்
- நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய எம்.பி.,க்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இந்த வுழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
- 2013ம் ஆண்டுக்கு - நஜ்மா ஹெப்துல்லா, 2014க்கு - நரேன் யாதவ், 2015க்கு - குலாம் நபி ஆசாத், 2016க்கு - திர்னேஷ் திரிவேதி, 2017க்கு பார்த்ருஹரி மஹ்தாப் ஆகியோர் விருது பெற்றனர்.
ராஜஸ்தானில் பசு சரணாலயம்
- நாட்டிலேயே முதன் முதலாக ராஜஸ்தானில் பசு சரணாலயம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை சுற்றுலா தளமாகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இதற்காக பிக்காநர் மாவட்டம் நாபசார் பகுதியில் மோகன்லால் புலதேவி ஒஜா கவுசாலா என்ற தனியார் அறக்கட்டளைக்கு 320.42 ஏக்கர் நிலத்தை ராஜஸ்தான் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
- பிக்காநர் வந்த முதல்வர் வசுந்தரராஜே இது தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜூலை 27ம் தேதி கையெழுத்திட்டார். சரணாலயத்தை சுற்றுலா தளமாக்கும் திட்டமும், நந்திசாலா வளர்ச்சி திட்டமும் இதில் அடங்கும்.
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு
- வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறுகிய கால கடன் மீதான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வாங்கி 0.25 % உயர்த்தியுள்ளது. அதுபோல ஜிடிபி 7.4 சதவிகித மாக உயர்ந்துள்ளது.
- இதன் காரணமாக வீட்டுக் கடன் மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
கருப்பின மக்களுக்கு நில விநியோகம் அரசமைப்பு சட்டத்தை திருத்துகிறது தென்னாப்பிரிக்கா
- தென்னாப்பிரிக்காவில் நிலவுடமையாளர்களிடம் இருந்து இழப்பீடு ஏதும் தராமல் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா.
- 30 சதவீத நிலங்கள் கருப்பின மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்திருந்தாலும், இனப் பாகுபாடு ஒழிக்கப்பட்ட காலத்தில் இருந்து 10 சதவீத நிலங்களே வெள்ளையின உரிமையாளர்களிடம் இருந்து கருப்பின மக்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பேடிஎம் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை
- பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு புதிய வாடிக்கையாளரை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு உடனே அமல்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளது. கேஒய்சி விதிகளை கடைபிடிப்பதில் பேஎம் வங்கியின் செயல்பாடு அதிருப்தி காரணமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொது மன்னிப்பு 3 மாதம் நடைமுறையில் இருக்கும்
- அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேலாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செயல்படுத்த உள்ளது.
- ஐக்கிய அரபு எமிரெட்ஸ் முன்னெடுக்கும் இந்த மூன்று மாத விசா பொதுமன்னிப்பு திட்டம் மூலம் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நலனாக இருக்கும். இப்போதைய திட்டப்படி அவர்கள் நாட்டைவிட்டு அபராதம் எதுவும் செலுத்தாமல் வெளியேறலாம்.
- அவர்கள் வேலையை தேடிக்கொள்ள 6 மாதங்கள் அனுமதி வழங்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த 2.8 மில்லியன் பேர் உள்ளனர். எத்தனை பேர் இத்திட்டத்தால் பயனடைவார்கள் என்பது தெரிவிக்கப்பட்டவில்லை.
- ஆனால், இந்தியா, வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பொதுமன்னிப்பு திட்டத்தால் பயனடைவார்கள், அவர்கள் சொந்த நாட்டிற்கு பிரச்னையின்றி திரும்பவும் வழி ஏற்பட்டுள்ளது.
- 2018 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்னதாக விசா மீறல்களில் ஈடுபட்டவர்கள் விசா பொதுமன்னிப்பு வழங்கப்படும் இந்த மூன்று மாத காலகட்டங்களில், சட்டப்பூர்வமாக தங்கள் நிலையை திருத்திக்கொள்ளலாம். அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை பொதுமன்னிப்பு காலம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெண்களே நிர்வகிக்கும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்
- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெண்கள் முன்னேற்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 2 மெட்ரோ ரயில் நிலையங்களை அனைத்து பெண்கள் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
- பெண்கள் முன்னேற்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஷெனாய் நகர் ரயில் நிலையத்தை ஜூலை 31 முதல் அணைத்துப் பெண்கள் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
- அதே போல, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமான கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து பெண்கள் ரயில் நிலையமாக செயல்படும் என்று அறிவித்துள்ளது.
- இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்து பெண்கள் ரயில் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன.