TNPSC SHOUTERS - JULY 2018
CURRENT AFFAIRS
|
||
S.NO
|
DAY & MONTH
|
DOWNLOAD LINK
|
1.
|
1st
JULY 2018
|
|
2.
|
2nd
JULY 2018
|
|
3.
|
3rd
JULY 2018
|
|
4.
|
4th
JULY 2018
|
|
5.
|
5th
JULY 2018
|
|
6.
|
6th
JULY 2018
|
|
7.
|
7th
JULY 2018
|
|
8.
|
8th
JULY 2018
|
|
9.
|
9th
JULY 2018
|
|
10.
|
10th
JULY 2018
|
|
11.
|
11th
JULY 2018
|
|
12.
|
12th
JULY 2018
|
|
13.
|
13th
JULY 2018
|
|
14.
|
14th
JULY 2018
|
|
15.
|
15th
JULY 2018
|
|
16.
|
16th
JULY 2018
|
|
17.
|
17th
JULY 2018
|
|
18.
|
18th
JULY 2018
|
|
19.
|
19th
JULY 2018
|
|
20.
|
20th
JULY 2018
|
|
21.
|
21st
JULY 2018
|
|
22.
|
22nd
JULY 2018
|
|
23.
|
23rd
JULY 2018
|
|
24.
|
24th
JULY 2018
|
|
25.
|
25th
JULY 2018
|
|
26.
|
26th
JULY 2018
|
|
27.
|
27th
JULY 2018
|
|
28.
|
28th
JULY 2018
|
|
29.
|
29th
JULY 2018
|
|
30.
|
30th
JULY 2018
|
|
31.
|
31th
JULY 2018
|
DOWNLOAD TNPSCSHOUTERS
CURRENT AFFAIRS
JULY 2018 - TAMIL PDF
ஜூன் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 95,610 கோடி - ஹஸ்முக் ஆதியா
- பல முனை வரிகளான வாட் வரி, கலால் வரி, சுங்க வரி, நுழைவு வரி (Entry Tax) பொழுது போக்கு வரி என பலதரப்பட்ட வரி முறைகளாக இருந்த வரி விவிதிப்பு முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக ஒரே தேசம் ஒரே வரி (One Nation One Tax) என்ற முழக்கத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.
- சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் வசூலான தொகை எவ்வளவு என்பதை வரித்துறையினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ.95,610 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதித்துறை செயலர் தகவல் தெரிவித்தார்.
- நடப்பு 2018-19ம் நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்திற்கு உதவும் இ-வே பில் என்னும் இணையவழி ரசீது பயன்பாடு அமல்படுத்தப்பட்டதாலும் ஏப்ரல் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1,03,458 கோடி ரூபாயை தொட்டு சாதனை படைத்தது. கடந்த நிதி ஆண்டில் சராசரியாக மாதத்துக்கு ரூ.90,000 கோடியாக வந்திருந்த நிலையில் மே மாத வசூல் ரூ.94,016 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரிக்காவில் 89 கேரட் மஞ்சள் வைரம் கண்டுபிடிப்பு
- லெசோதோ நாட்டின் மோதே வைர சுரங்கத்திலிருந்து 89 காரட் மஞ்சள் வைரம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.
- முன்னர் 25 காரட் அளவிலான மஞ்சள் வைரமே கிடைத்திருப்பதாகவும், தற்போது தான் 89 கேரட் அளவிலான மஞ்சள் வைரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தின் காப்புரிமையில் 70 சதவீதம் லுகாபாவிற்கும், எஞ்சிய பகுதி லெசோதா அரசிற்கு சொந்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பிரமாண்ட மஞ்சள் வைரத்தின் மதிப்பு 10 மில்லியன்பவுண்ட் ஸ்டெர்லிங் ( இந்திய மதிப்பில் ரூ. 90,31,62,562.20 ) என்று மதிப்பிடப்பட்டுள்ளது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்
- தமிழக அரசின் தொடர் முயற்சியால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் இந்த இரண்டு அமைப்புகளிலும் உள்ளனர்.
- இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் துவங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைனின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
மெக்ஸிகோ நகரத்தின் மேயராக தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண் மேயர்
- மெக்ஸிகோ மாநகரின் வரலாற்றின் மேயராக பெண் ஒருவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் பெண் மேயராக தேர்தெடுக்கப்பட்டுள்ள கியூடியா ஷின்பாம் வரும் நாட்களில் பதவியேற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்எல்சி இந்தியா நிறுவன புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
- என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநராக நாதெள்ள நாக மகேஸ்வர் ராவ் அண்மையில் பொறுப்பேற்றார்.
- என்எல்சி நிறுவனத்தின் ராஜஸ்தான் மாநிலம், பர்சிங்சர் சுரங்க மின் திட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, அந்தத் திட்டத்தின் தலைமை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். பர்சிங்சர் அனல் மின் திட்டம் முழு உற்பத்தி அளவை எட்டத் தேவையான தொழில்நுட்ப மாற்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியவர்.
இந்தியாவில் 19,500 மொழிகள் பேசப்படுவதாக ஆய்வில் தகவல்
- இந்தியாவில், 19 ஆயிரத்து, 569 மொழிகள், தாய் மொழிகளாக பேசப்படுகின்றன. 10 ஆயிரம் பேருக்கு மேல், 121 மொழிகள் பேசப்படுகின்றன. இருப்பினும், மொத்த மக்கள் தொகையில், 96.71 சதவீதம் பேர், நாட்டின், 22 பட்டியல் மொழிகளில் ஒன்றை, தாய்மொழியாக பேசுகின்றனர்.
- வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான்' கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 2019, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பைனல் இந்தியா தோல்வி
- சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் பைனலில் பெனால்டி சூட் அவுட் முறையில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. நெதர்லாந்தில் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் பைனலில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
- ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தது. இதனையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப் பட்டது. இதில் இந்திய அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.