TNPSC SHOUTERS - JUNE 2018
CURRENT AFFAIRS
| ||
S.NO
|
DAY & MONTH
|
DOWNLOAD LINK
|
1.
|
1st JUNE 2018
| |
2.
|
2nd JUNE 2018
| |
3.
|
3rd JUNE 2018
| |
4.
|
4th JUNE 2018
| |
5.
|
5th JUNE 2018
| |
6.
|
6th JUNE 2018
| |
7.
|
7th JUNE 2018
| |
8.
|
8th JUNE 2018
| |
9.
|
9th JUNE 2018
| |
10.
|
10th JUNE 2018
| |
11.
|
11th JUNE 2018
| |
12.
|
12th JUNE 2018
| |
13.
|
13th JUNE 2018
| |
14.
|
14th JUNE 2018
| |
15.
|
15th JUNE 2018
| |
16.
|
16th JUNE 2018
| |
17.
|
17th JUNE 2018
| |
18.
|
18th JUNE 2018
| |
19.
|
19th JUNE 2018
| |
20.
|
20th JUNE 2018
| |
21.
|
21st JUNE 2018
| |
22.
|
22nd JUNE 2018
| |
23.
|
23rd JUNE 2018
| |
24.
|
24th JUNE 2018
| |
25.
|
25th JUNE 2018
| |
26.
|
26th JUNE 2018
| |
27.
|
27th JUNE 2018
| |
28.
|
28th JUNE 2018
| |
29.
|
29th JUNE 2018
| |
30.
|
30th JUNE 2018
|
இந்தியா-சிங்கப்பூர் நடுவே விமான போக்குவரத்து ஒப்பந்தம்
- சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் லீ சீயன் லூங்குடன் 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதில் கடல்சார் ஒத்துழைப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கும்.
- சிங்கப்பூர் எப்போதுமே இந்தியாவின் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் முக்கியத்துவம் வகிக்கும் நாடு. சிங்கப்பூரில் தொழில் தொடங்கவே இந்தியர்கள் பலரும் விரும்புகிறார்கள். பல்வேறு நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் இந்தியாவை விரும்புவது தெரிகிறது. விரைவில் புதிதாக விமான சேவை போக்குவரத்து ஒப்பந்தம் உருவாக்கப்படும்.
- இந்திய பிரதமர் மோடி அவர்கள் நேற்று நடந்த சிங்கபூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் தொழில்நுட்ப கண்காட்சியை நேற்று பார்வையிட்டார், அப்போது இந்தியாவின் மூன்று பரிவர்ததனை செயலிகளான BHIM, RuPay, SBI போன்றவற்றை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலை., டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை என பெயர் மாற்றம்
- தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அரசாணை மூலம் பெயர் மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் நாகை வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுகமும், தரங்கம்பாடி கிராமத்தில் ரூ.120 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற பிரதமர் பதவி நீக்கம்
- ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜோய் வலுக்கட்டாயமாக அவரது பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
- பழமைவாத கட்சியின் தலைவரான ரஜோய் 2011ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெயினின் பிரதமராக செயல்பட்டு வந்தார்.
- நவீன ஸ்பெயினின் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்று பதவி இழக்கும் முதல் பிரதமர் மரியானோ ரஜோய் ஆவார்.
நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.94,016 கோடியாக குறைந்தது
- கடந்த மே மாதம், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வாயிலான வசூல், 94,016 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.இது, ஏப்ரலில், 1,03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
- மே மாதம், 62.47 லட்சம் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்துள்ளன. மொத்தம், 94,016 கோடி ரூபாய்வசூலானது.இதில், மத்திய அரசின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 15,866 கோடி; மாநில அரசுகளின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயிலாக, 21,691 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும் ஒருங்கிணைந்த வரி மூலம், 49,120 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இத்துடன், இழப்பீட்டு வரியாக, 7,339 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, மே மாதம், ஜி.எஸ்.டி., வசூல் குறைவாக உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீடு
- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - சிங்கப்பூர் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- இந்தியா - சிங்கப்பூர் இடையே, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கடற்படை தளவாடங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்துவது, இரு தரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்துவது உட்பட, எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இரு நாடுகளுக்கும் இடையே, ராணுவம் மற்றும் கடற்படை தளவாடங்கள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளோம். இணையம் வழியே தொடுக்கப்படும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
தருமபுரியில் ஆலம்பாடி மாட்டு இன ஆராய்ச்சி மையம்
- தருமபுரியில் ஆலம்பாடி மாட்டு இன ஆராய்ச்சி மையம் ரூ.4 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
- 6 கால்நடை பன்முக மருத்துவமனைகள் மற்றும் 22 பெருமருத்துவமனைகளில் ரூ.2.59 கோடி செலவில் அறுவைச் சிகிச்சைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும்.
மின்னணு வழித்தட ரசீது முறை இன்று முதல் அமல்
- தமிழகத்துக்குள் சரக்குகளை அனுப்ப சனிக்கிழமை (ஜூன் 2) முதல் மின்னணு வழித்தட ரசீது (இ-வே பில்) முறை அமலுக்கு வருகிறது.
- மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்துக்கு இ-வே பில் முறை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மாநிலத்துக்குள்ளான சரக்குப் போக்குவரத்துக்கு இதை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று தொழில் நிறுவனங்கள் கோரியிருந்தன.
- இதையடுத்து, ஜம்மு காஷ்மீர், கோவா, சத்தீஸ்கர், மிúஸுரம், பஞ்சாப், ஒடிஸு மாநிலங்களில் இ-வே பில் அமல்படுத்தப்படுவது ஜூன் 1ஆம் தேதிக்கும், தமிழ்நாட்டுக்கு ஜூன் 2ஆம் தேதிக்கும், மேற்கு வங்கத்துக்கு ஜூன் 3ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
- ஒருவரிடம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான மதிப்புடைய பொருள்களின் பல பில்கள் இருந்தாலும் அவர் இ-வே பில் போட வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 7 புதிய நீதிபதிகள்
- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய சட்ட அமைச்சகம் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது.
- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நீதிபதி பதவியிடங்கள் 75. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் சேர்த்து தற்போது 56 நீதிபதிகள் உள்ளனர். புதிதாக 7 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் காலியிடங்களின் எண்ணிக்கை 12-ஆகக் குறைந்துள்ளது.
- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்ரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன் ஆகிய 7 நீதிபதிகளை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலையை இம்பாலில் அமைக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.தேசிய விளையாட்டு பல்கலையை மணிப்பூர் மாநிலம், இம்பாலில் அமைக்கும் மசோதாவுக்கு மே 23 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
- இம்பால் மாவட்ட கவ்டுருக் பகுதியில் 325.90 ஏக்கர் நிலம் மணிப்பூர் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட துறைகளை வளர்ச்சி அடைய செய்வதே இந்த பல்கலையின் பணியாக இருக்கும் என கூறப்படுகிறது.
தென்ஆப்ரிக்கா புறப்பட்டார் சுஷ்மா ஸ்வராஜ்
- வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் BRICS மற்றும் IBSA அமைச்சர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தென்ஆப்ரிக்காவிற்கு புறப்பட்டார்.
அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் சென்னை, கேரள அணிகள் சாம்பியன் வென்று அசத்தல்
- அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை சுங்கத் துறையும், மகளிர் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
- கோவையில் நாச்சிமுத்து கௌண்டர் கோப்பைக்கான 53-வது ஆடவர் கூடைப்பந்துப் போட்டி, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 17-வது மகளிர் கூடைப்பந்துப் போட்டிகள் கோவை மாவட்டம், வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன.
- இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சென்னை சுங்கத் துறை அணி 69-63 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி இரயில்வே அணியைத் தோற்கடித்தது.
- மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கேரள மின் வாரிய அணி 59 - 43 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தா கிழக்கு இரயில்வே அணியை வீழ்த்தியது.