Q1: சான்றிதழ் சரிபார்ப்பு என்பது என்ன?
A1: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் செல்லும் அடுத்த கட்ட நகர்வே சான்றிதழ் சரிபார்ப்பு ஆகும். அதாவது, விண்ணப்பதாரர்கள் தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து மூலச் சான்றிதழ்களையும் சரியாக முறைப்படி வைத்து உள்ளார்களா என்று உறுதி செய்வதே சான்றிதழ் சரிபார்ப்பு.
--------------------------------------------------------------------------------
Q2: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எவ்வாறு போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள்?
A2: முன்னர் மொத்த காலியிடங்களில் ஒரு காலியிடத்திற்கு இரண்டு பேர் (அதாவது 1:2 விகிதம்) என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டனர், பின்னர் 1: 1.5 அல்லது சமீபத்தில் 1: 1.2 என்ற அளவில் கூட அழைக்கப்படுகிறார்கள். இந்த குரூப் 2A தேர்வில் 1:3 என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
--------------------------------------------------------------------------------
Q3: சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலே அவர்களுக்கு வேலை நிச்சயம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
A3: அப்படி சொல்ல முடியாது. நிர்ணயிக்கப்பட்ட காலியிடங்களுக்குத் தேவையான போட்டியாளர்களை விட அதிகமான அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்படுவதால் சான்றிதழ் சரிபார்ப்பிற்குச் சென்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று சொல்ல முடியாது. அவர்களில் சிலருக்கு அடுத்தகட்ட கலந்தாய்வில் கூட அழைப்பு இல்லாமல் போகலாம்.
--------------------------------------------------------------------------------
Q4: எதற்க்காக தேவைக்கும் அதிகமானோரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு TNPSC அழைத்து அதில் சிலரை திரும்ப அனுப்புகிறது?
A4: சரியான நபர்களை அழைக்கும் பட்சத்தில் அவர்களில் பலர் ஏற்கனவே வேலையில் இருந்து இந்த வாய்ப்பை புறக்கணித்தல் அல்லது தகுதி இல்லாத போட்டியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளியேற்றப் படல் போன்ற நிகழ்வுகளால் TNPSC-க்கு மீண்டும் மீண்டும் அனைவரையும் அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த கால விரயம் மற்றும் வேலைப் பளுவை குறைக்கவே தேவைக்கும் அதிகமானோர் அழைக்கப் படுகிறார்கள்.
--------------------------------------------------------------------------------
Q5: இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு எங்கு நடந்து வந்தது?
A5: சென்னை TNPSC அலுவலகத்தில் நடந்து வந்தது. தமிழ் நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னை வரவேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q6: இனி சான்றிதழ் சரிபார்ப்பு எங்கு நடை பெரும்?
A6: இனி சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்ந்து எடுக்கப் பட்ட போட்டியாளர்கள் சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது மூலச் சான்றிதழ்களை (ஒரிஜினல்) ஆன்லைனில் பதிவேற்றம் செய்து முடித்துக் கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------
Q7: அப்படியானால் நானே அருகில் உள்ள எனது நண்பன் நடத்தி வரும் கணினி மையத்திற்குச் (Computer center) சென்று எனது சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யலாமா?
A7: கூடாது. இதற்க்கான வாய்ப்பு, மாவட்டங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் E-சேவா மையங்களுக்கு மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே E-சேவா மையம் மூலம் அல்லாமல் தன்னிச்சையாக உங்களால் உங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பொது சேவை மையம் மூலமாக மட்டுமே பண்ண முடியும்.
--------------------------------------------------------------------------------
Q8: நான் இப்பொழுது வேலை காரணமாக வெளியூரில் வசித்து வருகிறேன். அந்த மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பண்ணலாமா?
A8: உங்கள் சொந்த மாவட்டத்தில்தான் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, தமிழ் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
Q9: பொது சேவை மையங்கள் எனது மாவட்டத்தில் எங்குள்ளது என்பதனை எப்படித் தெரிந்து கொள்வது?
A9: TNPSC வெளியிட்டுள்ள பொது சேவை மையங்களின் பட்டியல் மற்றும் அதன் முகவரிகள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.
http://www.tnpsc.gov.in/docu/List_of_new_esevai_address_details.pdf
--------------------------------------------------------------------------------
Q10: பொது சேவை மையங்கள் செயல் படும் நேரம் எது?
A10: காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.
--------------------------------------------------------------------------------
Q11: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என TNPSC நிர்ணயித்துள்ள நாட்கள் எவை?
A11: ஏப்ரல் 23 , 2018, திங்கள் கிழமை முதல் மே 4, 2018, வெள்ளிக்கிழமை வரை. மே 4 க்கு பிறகு உங்களால் உங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியாது. TNPSC-யால் இதற்குண்டான இணையதளம் முடக்கப்பட்டு விடும்.
--------------------------------------------------------------------------------
Q12: ஏப்ரல் 23--மே 4, இந்த நாட்களில் நான் எந்த நாளில் செல்ல வேண்டும் என்று TNPSCஅறிவுறுத்தி உள்ளதா? நான் அந்த குறிப்பிட்ட நாளில்தான் சென்று எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா?
A12: இல்லை. இந்த நாட்களில் அரசு விடுமுறை நாட்கள் தவிர உங்களுக்கு தோதான எந்த நாளிலும் சென்று உங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தனியரும் இந்த நாளில் தான் செல்ல வேண்டும் என TNPSC குறிப்பிடவில்லை.
--------------------------------------------------------------------------------
Q13: TNPSC குறிப்பிட்டுள்ள நாட்களில் எனது சான்றிதழ்களை நான் பதிவேற்றம் செய்யாவிட்டால் என்ன ஆகும்?
A13: நீங்கள் Gr-2A வேலைக்கான போட்டியில் இருந்து நிரந்தரமாக விலக்கப் படுவீர்கள். மறு வாய்ப்பும் அளிக்கப் படாது.
--------------------------------------------------------------------------------
Q14: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலில் எனது பதிவு எண் உள்ளது. இது தவிர எனக்கு தனிப்பட்ட கடிதத்தினை TNPSC அளிக்குமா?
A14: ஆம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வான போட்டியாளர்களுக்கு TNPSC-யால் வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட கடிதத்தினை கீழ்கண்ட இணைப்பில் சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் போட்டுக் கொள்ளலாம்.
http://www.tnpsc.gov.in/Resultget-g2a_cv_call2k17.html
--------------------------------------------------------------------------------
Q15: என்ன என்ன சான்றிதழ்களை நான் கொண்டு போக வேண்டும்?
1. உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
2. SSLC மதிப்பெண் சான்றிதழ்
3. HSC / DIPLOMO/ITI / Teacher Training மதிப் பெண் சான்றிதழ்.
4. இளநிலைப் பட்டத்திற்க்கான (UG) சான்றிதழ்.
5. முதுநிலைப் பட்டத்திற்க்கான (PG) சான்றிதழ்.
6. சாதிச் சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 15Fல் தெரிவித்துள்ளபடி)
7. முன்னாள் ராணுவத்தினர் என்பதற்கான சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 13 ல் தெரிவித்துள்ளபடி).
8. ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 5ல் தெரிவித்துள்ளபடி).
9. மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 12 ல் குறிப்பு 1 ல் தெரிவித்துள்ளபடி).
10. இறுதியாகப் பயின்ற கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ்.
11. இளநிலை பட்டம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்.
12. தொழில்நுட்பத் தகுதி. (தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் சான்றிதழ்கள்).
--------------------------------------------------------------------------------
Q16: சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு மேற்கண்ட சான்றிதழ்களைத் தவிர வேறு என்ன வேண்டும்?
A16: உங்களது நிரந்தர பதிவின் (One Time Registration) பயனாளர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Pass word) தேவை.
--------------------------------------------------------------------------------
Q17: எனது மாற்றுச் சான்றிதழில் (Transfer Certificate) நன்னடத்தை உள்ளது. நான் தனியாக வாங்க வேண்டுமா?
A17: உங்கள் மாற்றுச் சான்றிதழில் (TC) உங்களது நன்னடத்தை இருப்பின், அதனையே பயன்படுத்தலாம்.
ஆனால், மாற்றுச் சான்றிதழில் "His/Her Conduct and Character is Good" என்ற வார்த்தை முழுவதுமாக இருக்க வேண்டும். His/Her Conduct is Good என்று மட்டும் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மாற்றுச் சான்றிதழில் உங்களது நன்னடத்தை கொடுக்கப்பட்டு இருந்தாலும், இறுதியாகப் பயின்ற கல்வி நிலையத்தில் சென்று சான்றிதழ் வாங்குவது சிறப்பு. இதனை ஒரு முறை மட்டும் வாங்கினால் போதும், அனைத்துத் தேர்வுக்கும் பயன்படுத்தலாம்.
--------------------------------------------------------------------------------
Q18: நான் இறுதியாக தொலை தூரக் கல்வியில் பயின்றேன். அப்படியானால் நான் எங்கு எனது நன்னடத்தைச் சான்றிதழ் வாங்க வேண்டும்?
A18: நீங்கள் அதற்க்கு முன்னதாக எந்த கல்வி நிறுவனத்தில் ரெகுலரில் படித்தீர்களோ அங்கு இந்த நன்னடத்தைச் சான்றிதழை வாங்க வேண்டும். அதாவது குறைந்தது ஒருவருட கோர்ஸில் படித்து இருக்க வேண்டும். ஆறு மாதம் அல்லது மூன்று மாதம் டிப்ளமோ கோர்ஸ் படித்த நிறுவனங்களில் வாங்கக் கூடாது.
உதாரணமாக நீங்கள் முதுகலை தொலைதூரக் கல்வி முறையில் படித்து இருந்தால், இளநிலை ரெகுலரில் படித்து இருந்தால் அங்கு வாங்கலாம். அல்லது முதுகலைக்கு முன்பு இளங்கலை கல்வியியல் (B.Ed) படித்து இருந்தால் அங்கு வாங்கலாம்.
நீங்கள் இளங்கலை தொலை தூரக் கல்வியில் படித்து இருந்தால், +2 எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அங்கு வாங்கலாம்.
--------------------------------------------------------------------------------
Q19: இளங்கலை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் எங்கு வாங்க வேண்டும்?
A19: ரெகுலரில் படித்தவர்கள் அவர்கள் கல்லூரி முதல்வரிடமும், தொலை தூரக் கல்வியில் படித்தவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடமும் வாங்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q20: தமிழ் வழி சான்றிதழ் கொடுத்துள்ள ஆங்கிலப் படிவத்தில் தான் வாங்க வேண்டுமா?
A20: TNPSC ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் படிவம் கொடுத்துள்ளது. இருப்பினும், ஆங்கிலத்தில் வாங்குவது நலம். தமிழில் வாங்கி வைத்து இருப்பவர்கள் அதனை பதிவேற்றம் செய்து விட்டு, முடிந்தால் ஆங்கிலத்தில் ஒன்று வாங்கி கலந்தாய்வின்போது கொண்டு செல்லலாம். இரு சான்றிதழ்களும், தேதி மாறுபட்டு இருந்தாலும் பரவாயில்லை.
--------------------------------------------------------------------------------
Q21: என்னிடம் தமிழ் வழி சான்றிதழ் மற்றும் இறுதியாகப் பயின்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கக் கூடிய நன்னடத்தைச் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்கள் இல்லை. கிடைக்குமா?
A21. கீழ்க் கண்ட இணைப்பின் மூலம், எனது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uRmRYQmNzUy1oTzBQV0dkbUNRMlNVLUNZbXlF
--------------------------------------------------------------------------------
Q22: இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. இதற்க்கு முன்பு குரூப் A அதிகாரி அல்லது குரூப் B அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழை கேட்டர்களே, அது மேற்கண்ட வரிசையில் இல்லையே?
A22: ஆமாம், குரூப் A அதிகாரி அல்லது குரூப் B அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் இப்போது பதிவேற்றம் செய்யத் தேவை இல்லை. அதனை கலந்தாய்வின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இதற்க்கான அறிவுரை கலந்தாய்விற்க்கான அழைப்புக்கு கடிதத்தில் இருக்கும். அதனை பின்பற்றி நடக்கவும்.
--------------------------------------------------------------------------------
Q23: நான் தற்சமயம் அரசு அலுவலராக உள்ளேன். நான் எப்பொழுது தடையின்மைச் சான்றிதழ் (NOC) கொடுக்க வேண்டும்? இப்பொழுது அதனை பதிவேற்றம் செய்யலாமா?
A23. அரசு ஊழியர்களுக்கான தடையின்மைச் சான்றிதழை தற்சமயம் பதிவேற்றம் செய்ய சொல்லவில்லை. எனவே இதனையும் கலந்தாய்வின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இதற்க்கான அறிவுரை கலந்தாய்விற்க்கான அழைப்புக்கு கடிதத்தில் இருக்கும். அதனை பின்பற்றி நடக்கவும்.
ஆனால், தடையின்மைச் சான்றிதழ் தற்சமயம் இருக்கும் பட்சத்தில், அதனையும் பதிவேற்றம் செய்யலாம், தவறில்லை என TNPSC-யில் தெரிவித்தார்கள்.
--------------------------------------------------------------------------------
Q24: நான் பட்டப் படிப்பிற்க்கான தகுதிக்கு (Degree Qualification) எனது மதிப்பெண் பட்டியல் (Cumulative Mark Sheet) சான்றிதழ் எண்ணையும், தேதியையும் கொடுத்து விட்டேன். அப்படியானால், நான் எதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்?
A24: நீங்கள், பட்டச் சான்றிதழை (Convocation) பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்த, மதிப் பெண் பட்டியலை (Cumulative Mark Sheet) பதிவேற்றம் செய்ய தேவை இல்லை.
--------------------------------------------------------------------------------
Q25: எனது சாதிச் சான்றிதழில் தவறு இருப்பதனை நான் தற்போதுதான் கவனித்தேன். அதனைப் பதிவேற்றம் செய்யலாமா?
A25: உங்கள் பெயர், அல்லது தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு போன்றவற்றில் தவறு இருப்பின் அது பெரும் பிழையாகக் கருதப்படும். நீங்கள் புதிதாக ஒரு சாதி சான்றிதழை வாங்கி அதனைப் பதிவேற்றம் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
Q26: அப்படியானால், நான் ஏற்கனவே விண்ணப்பத்தில் கொடுத்து இருக்கும் பழைய சாதி சான்றிதழுக்கும், தற்போதைய புதிய சான்றிதழுக்கும், சான்றிதழ் எண் (Certificate Number) வேறுபடுமே?
A26: சான்றிதழ் எண் வேறுபாட்டால் பரவாயில்லை. அது ஏற்றுக் கொள்ளப்படும். சாதி சான்றிதழைப் பொறுத்தவரை உங்கள் பெயர், அல்லது தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு மிகச் சரியாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
--------------------------------------------------------------------------------
Q27: நான் பொதுச் சேவை மையத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்யும் பொழுது ஒரு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப் படமால் விடுபட்டு விட்டது. அதனை மறு நாள் சென்று பதிவேற்றம் செய்யலாமா?
A27: செய்யலாம். பொது சேவை அலுவலருக்கு தணிக்கை வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரால், மே 4 வரை உங்கள் கணக்கில் உள்ள, எந்த ஒரு சான்றிதழையும் சேர்க்க முடியும், நீக்க முடியும்.
இருப்பினும், முதல் முறை பதிவேற்றம் செய்யும் பொழுதே கவனமாக செயல்படுதல் நலம்.
--------------------------------------------------------------------------------
Q28: நான் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களில் என்னையறியாமல் பெரிய தவறுகள் ஏதும் இருப்பின், அது எப்போது எனக்குத் தெரியப்படுத்தப் படும்?. கலந்தாய்வில் போதுதான் தெரிய படுத்துவார்களா?
A28: இல்லை. நான் இன்று அலுவலகத்தில் நேரில் சென்று கேட்ட பொழுது, பெரிய தவறுகள் உள்ள போட்டியாளர்களுக்கு, கலந்தாய்விற்கு முன்னனதாக தெரியப்படுத்தப் படும் என்று கூறினார்கள்.
--------------------------------------------------------------------------------
Q29: சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக மேலும் எனக்கு ஏதும், குறுந்செய்தி அல்லது மின் அஞ்சல் யிலிருந்து வருமா?
A29: உங்களது சான்றிதழ்களில் எந்த பிரச்சினையும் இல்லாத வரை எதுவும் வராது.
--------------------------------------------------------------------------------
Q30: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யப்படும் பொழுது, எனது இளங்கலை சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டு விட்டது. சான்றிதழ் பதிவேற்றத்திற்கு என்று கொடுக்கப்பட்ட நாளும் முடிந்து விட்டது. இப்போது என் நிலை என்ன?
A30: அப்படி விடுபட்டுப் போனால், நீங்கள் இளங்கலை பட்டதாரியாக கருதப்பட மாட்டீர்கள். உங்களது கல்வித் தகுதி என்ற +2 அளவிலேயே TNPSC-யால் கணக்கில் கொள்ளப்படும். மேலும், Gr 2A தேர்விற்கு இளங்கலை பட்டம் என்பதே அடிப்படைத் தகுதி என்பதனால் நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள். கலந்தாய்விற்கு அழைக்கப்பட மாட்டீர்கள். எனவே, ஒவ்வொரு சான்றிதழையும் பதிவேற்றம் செய்யும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q31: நான் விண்ணப்பத்தில் முதுகலை என குறிப்பிடவில்லை. ஆனால் இப்பொழுது முதுகலை பட்ட சான்றிதழை பதிவேற்றம் செய்தால் நான் முதுநிலை பட்டதாரியாக கருதப் பட வாய்ப்பு உண்டா?
A31: நிச்சயமாக இல்லை. நீங்கள் விண்ணப்பத்தில் கூடுதல் தகுதிகளைக் குறிப்பிடாமல் சான்றிதழை மட்டும் பதிவேற்றம் செய்தால் அதனை TNPSC ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது.
--------------------------------------------------------------------------------
Q32: கொஞ்சம் புரியும்படி விளக்கமாக சொல்ல முடியுமா?
A32: கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதற்க்கு உண்டான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இரண்டில் ஒன்று தவறினாலும் நீங்கள் உங்கள் கல்வித் தகுதியை இழப்பீர்கள்.
--------------------------------------------------------------------------------
Q33: பல்வேறு வேலைப் பளுவின் காரணமாக, குறிப்பிட்டுள்ள நாட்களில் (Apr 23 - May 04) என்னால் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இயலவில்லை. எனவே கொடுக்கப்பட்ட தேதி முடிந்த பின்னர் நான் அஞ்சலிலோ அல்லது அலுவலகத்திற்கு நேரிலோ எனது சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் பதிவேற்றம் செய்ய இயலுமா?
A33: கண்டிப்பாக முடியாது. பொது சேவை மையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் பதிவேற்றம் செய்யமால் அதன் பின்னர் அஞ்சலில் அல்லது நேரில் பதிவேற்றம் செய்ய முடியாது. நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள்.
--------------------------------------------------------------------------------
Q34: நான் இந்த தேர்விற்க்காக TNPSC அறிவுறுத்தியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து விட்டேன். நான் அடுத்து வரும் வேறு ஒரு தேர்வில் இதே போன்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் இதே போன்று மீண்டும் எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமா?
A34: ஆமாம். ஒவ்வொரு தேர்விற்கும் நீங்கள் இதே போன்று ஒவ்வொரு முறையும் பொது சேவை மையத்திற்குச் சென்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q35: நான் கொஞ்சம் பிசியாக உள்ளேன். எனவே, எனது உறவினர் அல்லது நண்பர்களிடம் கொண்டு எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாமா?
A35: உங்களது சான்றிதழ்களை நீங்களே செய்வது தான் சிறப்பு. ஏனெனில் உங்களது விபரங்கள் உங்களுக்கே நன்றாகத் தெரியும். தவறு நடந்த பின் மனம் உடைவைத்தாய் விட, என்றும் வருமுன் காப்பது சிறந்தது.
--------------------------------------------------------------------------------
Q36: நான் சான்றிதழை பதிவேற்றம் செய்தமைக்கு பொது சேவை மையத்திலிருந்து, எனக்கு ஒப்புதல் சீட்டு எதுவும் கொடுக்கப்படுமா?
A36: ஆமாம், புகைப்படத்தில் உள்ளவாறு எந்த எந்த சான்றிதழ்களை நீங்கள் பதிவேற்றம் செய்து உள்ளீர்கள் என்று பொது சேவை மையத்தினால் ஒப்புதல் சீட்டு தரப்படும்.
--------------------------------------------------------------------------------
Q37. இந்த புதிய வகை ஆன்லைன் சான்றிதழ் பதிவேற்றத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்?
A37: .ஒரு சான்றிதழுக்கு ரூ.வீதம் வசூலிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------
Q38: இதனை முழுவதுமாகப் படித்த பின்னரும் எனக்கு ஐயம் தீரவில்லை. நான் என்ன செய்வது?
A38: பின் வரும் தொலைபேசி எங்களுக்கு அழைத்து நீங்களே உங்களது சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம். அல்லது, சென்னைக்கு அருகில் இருப்பின் நேரில் சென்று விபரம் கேட்கலாம்.
044-2533 2855
1800 4251 002
--------------------------------------------------------------------------------
Q39: எனக்கு மேற்கண்ட அனைத்தும் நன்றாக புரிந்து விட்டது. நான் என்ன செய்ய வேண்டும்?.
A39: கூறி இருப்பவற்றை பயன்படுத்தி நல்ல விதமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ஒப்புதல் சீட்டு வாங்கவும். மேலும், அனைவருக்கும் பயன்படும் முறையில் இந்த விபரத்தினைப் பகிரவும் (Share).
மேலும் இதில் சொல்லப் படாத கூடுதல் விபரங்கள் தெரிந்தால் கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும்.
--------------------------------------------------------------------------------