Type Here to Get Search Results !

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF

2018

S.NO
CURRENT AFFAIRS
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st JANUARY 2018
2.
2nd JANUARY 2018
3.
3rd  JANUARY 2018
4.
4th JANUARY 2018
5.
5th  JANUARY 2018
6.
6th  JANUARY 2018
7.
7th  JANUARY 2018
8.
8th  JANUARY 2018
9.
9th  JANUARY 2018
10.
10th  JANUARY 2018
11.
11th  JANUARY 2018
12.
12th  JANUARY 2018
13.
13th  JANUARY 2018
14.
14th  JANUARY 2018
15.
15th  JANUARY 2018
16.
16th  JANUARY 2018
17.
17th  JANUARY 2018
18.
18th  JANUARY 2018
19.
19th  JANUARY 2018
20.
20th JANUARY 2018
21.
21st JANUARY 2018
22.
22nd JANUARY 2018
23.
23rd  JANUARY 2018
24.
24th  JANUARY 2018
25.
25th  JANUARY 2018
26.
26th  JANUARY 2018
27.
27th  JANUARY 2018
28.
28th  JANUARY 2018
29.
29th  JANUARY 2018
30.
30th  JANUARY 2018
31.
31st   JANUARY 2018

சிவகங்கையில் கி.மு.3ம் நூற்றாண்டு பெருங்கற்கால கல்வட்டங்கள்
  • சிவகங்கை அருகே கி.மு. 3 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பெருங்கற்கால கல்வட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் திருமலை அருகே நாமனுார் நாமனிக்கண்மாயின் வடக்குகரைச் சரிவில் 100 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப் படுகின்றன.
  • கண்மாய்க்குள் மூன்று ஏக்கரில் இக்கற்கள் பரவி காணப்படுகின்றன. கி.மு. 1000 முதல் கி.பி. 500 வரை பெருங்கற்காலமாக இருந்தாலும், நாமனுார் பகுதியில் காணப்படும் கல்வட்டங்கள் கி.மு. 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. 
  • இதனை கர்நாடகா பிரம்மகிரியில் நடந்த அகழாய்வு மூலம் அறிய முடிகிறது. கல்வட்டங்கள் காணப்படும் பகுதியை கிராமமக்கள் 'மதமதக்கச்சாலை' (அ) வெள்ளக்கல்பொட்டல் என்று அழைக்கின்றனர். முதுமக்கள் தாழி என்பதே திரிந்து 'மதமதக்கத்தாழி' என்று பேச்சுவழக்கில் வந்துஇருக்கலாம்.
  • திருமலை குன்றில் வாழ்ந்தோரை தான் நாமனிக் கண்மாயில் புதைத்துள்ளனர். இக்கண்மாயில் 30 ஆண்டுகளுக்கு முன் முதுமக்கள் தாழி தோண்டியெடுக்கப்பட்டது. அவை தற்போது சிவகங்கை அருங்காட்சியகத்தில் உள்ளன. கல்வட்டங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! இனி எம்.ஆர்.பி விலை அவசியம்
  • ஆன்லைன் மூலம் வர்த்தம் செய்யும் நிறுவனங்களுக்கு நேற்று முதல் எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலை உள்பட ஒருசில முக்கிய விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை இனி கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இணையதளங்கள் மூலம் பொருட்களை வாங்கும் நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய விதிகள் புத்தாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் முக்கியமாக ஒரு பொருளின் எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச விற்பனை விலை, காலாவதி நாள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விவரங்கள் ஆகியவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
கடன் வட்டியை குறைத்தது எஸ்பிஐ
  • பாரத ஸ்டேட் வங்கி கடன் வட்டியை குறைத்துள்ளது. இதன் மூலம் இந்த வங்கியின் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை கடன் வட்டியை 8.95 சதவீதத்தில் இருந்து 0.3 சதவீதம் குறைத்து 8.65 சதவீதமாக அறிவித்துள்ளது. 
  • இதுபோல் அடிப்படை முதன்மை கடன் வட்டி விகிதம் 13.7 சதவீதத்தில் இருந்து 13.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டெபாசிட்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே, ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.95 சதவீதமாகவே நீடிக்கிறது. 
  • இந்த வட்டி குறைப்பு புத்தாண்டு தினமான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது என வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 
விதர்பா சாம்பியன் * ரஞ்சி கோப்பை வென்று வரலாறு
  • ரஞ்சி கோப்பை தொடரில் முதன் முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது விதர்பா அணி. 
  • டில்லி அணிக்கு எதிரான பைனலில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நெய்வேலியில் ரூ.655 கோடி செலவில் சூரியசக்தி மின்உற்பத்தி தொடக்கம்
  • நெய்வேலியில் ரூ.655 கோடி செலவில் 130 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின்உற்பத்தி தொடங்கியது. 
  • மத்திய நிலக்கரித்துறை செயலர் சுஷில் குமார் சூரியசக்தி மின்உற்பத்தியை தொடங்கி வைத்தார். 
செளதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று முதல் வாட் வரி அமல்
  • செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல்முறையாக வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருநாடுகளிலும் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
  • வளைகுடா நாடுகள் நீண்ட காலமாக வரியில்லா வாழ்க்கை என்ற வாக்குறுதியின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்த்து வந்துள்ளது. இந்த வரிவிதிப்பு முறை இன்று (ஜனவரி 1) முதல் இருநாடுகளிலும் அமலாகிறது.
  • வாட் வரி காரணமாக முதல் ஆண்டில், சுமார் 12 பில்லியன் திராம் (3.3 பில்லியன் டாலர்கள்) வருவாய் கிடைக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மதிப்பீடு செய்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு, ஆடைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஹோட்டல் அறைகள் ஆகியவற்றுக்கு வாட் பொருந்தும்.
  • ஆனால், மருத்துவ சிகிச்சை, நிதி சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றுக்கு வாட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • செளதி அரேபியாவில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வருவாய் எண்ணெய் தொழிலிலிருந்து கிடைக்கிறது. ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அந்த வருவாய் என்பது தோராயமாக 80 சதவீதமாக உள்ளது.
175 மணிநேரம் மாரத்தான் யோகா: சென்னைப் பெண் கின்னஸ் சாதனை
  • தொடர்ந்து யோகா செய்து சென்னையைச் சேர்ந்த பெண் புதிய கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார்.
  • சென்னையைச் சேர்ந்தவர் கவிதா பரணிதரன் (வயது 31). மூன்றரை வயது குழந்தைக்கு தாயான இவர் தற்போது யோகா செய்வதில் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
  • டிசம்பர் 23-ந் தேதி காலை 7 மணியளவில் இவருடைய மாரத்தான் யோகா முயற்சி தொடங்கியது. இதன்மூலம் 5-ஆம் நாளான டிசம்பர் 28-ந் தேதி பிற்பகல் 02:02 மணியளவில் இவர் முந்தைய மாரத்தான் யோகா கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
  • ​இந்நிலையில், தொடர்ந்து மாரத்தான் யோகாவில் ஈடுபட்ட கவிதா, டிசம்பர் 30-ந் தேதி வரை இந்த சாதனை முயற்சியை நீட்டித்தார்.
  • அவ்வகையில், உலகளவில் நீண்ட நேரம் மாரத்தான் யோகா முயற்சியில் ஈடுபட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.
தமிழகத்தில் 820 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர்: மத்திய குழுவின் ஆய்வில் தகவல்
  • தமிழகத்தில் ஒரே ஒரு ஆசிரியருடன் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருவதாக மத்தியக் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • தமிழகத்தில் சுமார் 820 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதாகவும், அவரே, அந்தப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறார் என்பதும் அண்மையில் நடத்தப்பட்ட மத்திய குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
  • இதேபோல் 37 சதவிதிகத்திற்கும் அதிகமான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 9 முதல் 12ஆம் வகுப்பு வரை, ஒவ்வொரு பாடத்திற்கும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும், ஆனால் அறிவியல் பாடத்திற்கு 57 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலேயே தற்போது இருப்பதாக மத்தியக் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel